கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பொறுப்பேற்க இதுவரை உறவினர்கள் யாரும் வரவில்லை !


துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இதுவரை உறவினர்கள் யாரும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடல் தற்போது கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்ற அறைக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து விசேட பாதுகாப்பின் கீழ் நேற்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோதே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.