சம்மாந்துறை பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது !


வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேகநபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், குறித்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.