மாணவனை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியை விமான நிலையத்தில் கைது !


16 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை ஒருவர், வெளிநாட்டிலிருந்து திரும்பியபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டு மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் மொரட்டுவ கல்தமுல்ல பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வளவு தாழ்ந்த மனநிலை கொண்ட ஆசிரியர்களால் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக தொடர்ந்து முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன, மேலும் இது தொடர்பாக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது அவசியம் என நீதவானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன், 7ஆம் திகதி தனது பெற்றோருடன் சேர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பணியகத்தில் முறைப்பாடளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.