செங்கலடி மத்தியகல்லூரியின் பழைய மாணவர்கள் சிரமதானம்!


மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்தியகல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பாக இன்றைய தினம் பாடசாலை ஒருபகுதி பகுதியளவில் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது. 

செங்கலடி மத்தியகல்லூரியில் 2010க.பொ.த மற்றும் 2013உயர்தரத்தில் கல்விகற்று வெளியேறிய பழைய மாணவர்களே இச் சிரமதான நடவடிக்கையை இன்று(07) மேற்கெண்டனர்.

பாடசாலை தவணை விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், பாடசாலையில் குப்பை கூழங்கள் அதிகமாக நிறைந்துள்ள பகுதிகளில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பாடசலை அதிபர் திரு.வ.சுவர்னேஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கமைய இவ் வேலைத்திட்டம் குறித்த பிரிவு பழைய மாணவர்களினால் இடம்பெற்றுள்ளது. 

இதே வேளை செங்கலடி மத்திய கல்லூரியின் 150வது ஆண்டையொட்டி பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியில் பழைய மாணவர் பிரிவினரால் பாடசாலையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.