மட்டக்களப்பு காயான்கேணி கடற்கரையில் கரையொதுங்கிய உருளை வடிவ தாங்கி !


மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமையன்று இரும்பிலான உருளை வடிவ தாங்கியொன்று கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மிதந்து வந்த தாங்கியை பிரதேச மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து கரைசேர்த்துள்ளனர்.

இது ஆழ்கடலில் தரித்து நிற்கும் கப்பல்களின் உதிரிப்பாகமாகவோ அல்லது அவற்றின் ஏனைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் பொருளாகவோ இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனை பிரதேசமக்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த வாரம் வாகரை பால்சேனை கடற்கரையில் மியன்மார் நாட்டு படகு என நம்பப்படும் மிதப்பொன்றும் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.