அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்ட மருதமுனையை சேர்ந்த ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் இன்று (21.01.2025) காலை தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி வந்த எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராக கடமையாற்றும் ஏ.எஸ்.எம்.அஸீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ்.எம்.அஸீம் கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஏ.டி.எம்.ராபி, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராக கடமையாற்றும் நிலையிலேயே பிராந்திய உள்ளுராட்சி ஆணையராகவும் ஏ.எஸ்.ஏ. அஸீம் கடமையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ்.எம்.அஸீம்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றி பலரினதும் நன்மதிப்பை பெற்ற ஒருவர் என்பதுடன் கல்முனை மாநகர சபையின் சிறந்த செயல்பாட்டிற்கான முழுமையான பணிகளை மேற்கொண்டு வருகின்றமையும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் கூடுதலான உள்ளூராட்சி மன்றங்களைக் கொண்டுள்ள அம்பாறை மாவட்டத்திற்கு ஆளுமையும்,ஆற்றலும், நேர்மையும் கொண்ட இளம் வயதுடைய பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக ஏ.எஸ்.ம்.அஸீம் நியமிக்கப்பட்டிருப்பது தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.