பொலிஸ் அதிகாரிகள் மது அருந்திவிட்டு தூங்குவதைக் காட்டும் வீடியோ : விசாரணை ஆரம்பம் !



பொலிஸ் அதிகாரிகள் பலர் பணி நேரத்தில் குடிபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு பதிலளித்துள்ளது.

இந்த காணொளியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீதான விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.