கடந்த மாதம் 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ள இளைஞன் ஒருவரை கண்டுபிடிக்க கம்பஹா - பியகம பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கம்பஹா - மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த மாதம் 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பியகம பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள இளைஞனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இல. 385 சீ, வல்கம, மல்வானை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மொகமட் சம்சுன் ஹுசேன் என்ற 06 அடி உயரம் கொண்ட இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்த புகைப்படத்தில் உள்ள இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பியகம பொலிஸ் நிலையத்தின் 071 - 8591600 அல்லது 011 – 2487574 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.