நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் பெரிய மற்றம் நடுத்தர நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 55 நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதோடு, 60 க்கும் மேற்பட்ட குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றமை குறிப்பிடத்தக்கது.
பின்வரும் ஏனைய மாவட்டங்களில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டம்: 9 குளங்களில் 8 குளங்கள்
பதுளை மாவட்டம்: 7 குளங்களில் 4 குளங்கள்
மட்டக்களப்பு மாவட்டம்: 4 குளங்களில் 3 குளங்கள்
அம்பாந்தோட்டை மாவட்டம்: 10 குளங்களில் 4 குளங்கள்
காலி மாவட்டம்: 2 குளங்களில் 1 குளம்
கண்டி மாவட்டம்: 3 குளங்களில் 2 குளங்கள்
குருணாகல் மாவட்டம்: 10 குளங்களில் 9 குளங்கள்
மொனராகலை மாவட்டம்: 3 குளங்களில் 2 குளங்கள்
திருகோணமலை மாவட்டம்: 5 குளங்களில் 4 குளங்கள்
மன்னார் மாவட்டம்: 4 குளங்களில் 2 குளங்கள்
இந்த குளங்களில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தாழ்நில பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.