அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நீர் வடிகால் அமைப்பில் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இன்று (21) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில், வெள்ளத்தில் மூழ்கிய 3,000 ஏக்கர் நெற்பயிர்களில் சுமார் 1,000 ஏக்கர் வயல்கள் நீர் வடிந்தோடியதன் காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் 1,000 ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற முடியுமென தான் நம்புவதாகவும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்தார்