எதிர்வரும் 6 மாத காலத்தை வரையறுத்து 20 வீத மின்கட்டண குறைப்பை இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை, ஹோட்டல் மற்றும் அதனுடனான தொழிற்றுறையின் மின்கட்டணத்தை 31 சதவீத்ததால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.