O/L மாணவர்களுக்கான அறிவிப்பு !
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரிகள் இணைய வழி முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர,
“பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் இன்றைய தினத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் எக்காரணம் கொண்டும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை ஏற்க வாய்ப்பில்லை. எனவே, இந்தப் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் எவரும் நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ஒன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக வலியுறுத்துகிறேன். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணங்களை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது."