மருதானை - மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்ணொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய, குறித்த விசாரணைகளுக்கு அமைவாக துப்பாக்கி பிரயோகத்திற்காக வருகைதந்திருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நேற்றிரவு (21) கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 16.550 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
கைதான சந்தேகநபர் 35 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவராவார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரையில் பெண் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 3 பேர் கொழும்பு குற்றவியல் பிரிவு மற்றும் கொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.