கிளிநொச்சியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது !



கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 05 சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரவி நகர் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53 வயதுடைய பிதுனுவெவ, வவுனியா, பலாங்கொடை மற்றும் வெயங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.