இந்த விபத்தில் உயிர் பிழைத்த மாணவர் ஒருவர் விபத்து குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
"மத்ரசா பாடாசலையிலிருந்து காரைத்தீவுக்கு பஸ்ஸில் வந்தோம். அப்போது மாலை 3.30 மணி இருக்கும். அங்கு இருந்தவர்கள் உழவு இயந்திரத்தை கொண்டு ஆட்களை ஏற்றிச் செல்வதாக தெரிவித்தார்கள். நாங்கள் 11 பேர் உழவு இயந்திரத்தில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும், வெள்ளப்பெருக்கு காரணமாக டிராக்டரின் முன் சக்கரம் ஒரு பக்கமாக சரிந்தது. உழவு இயந்திரத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீருக்குள் வீழ்ந்தோம்.அப்போது உழவு இயந்திரம் முழுவதுமாக மூழ்கியது. அந்நேரத்தில் ஒரு அண்ணன் வந்து இரண்டு பேரை இழுத்துக் காப்பாற்றானார். நான் அங்கிருந்து விரைந்து சென்று அருகில் இருந்த மரத்தைப் பிடித்தேன். பின்னர் மரத்தில் ஏறினேன். ஒரு படகு அருகில் வந்தது. நான் கத்தினேன், கேட்கவில்லை. மீண்டும் அந்த படகு சென்றுவந்ததை அவதானித்தேன். அப்போது கத்தினேன், அவர்கள் வந்தார்கள். நான் படகில் ஏற்றப்பட்டேன். நடந்ததைச் சொன்னதும் அவர்கள் போய்ப் பார்த்தார்கள். அப்போதும் ஒருவர் அடித்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. பின்னர் என்னை கரைக்கு அழைத்து வந்தார்கள்"