கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறை மலசல கூடத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமொன்று திங்கட்கிழமை (23) மீட்கப்பட்டிருந்தது.
அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நீலாவணை 02 செல்லத்துரை வீதியை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க பூசாரி சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின்னர் திங்கட்கிழமை (23) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.