கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பேருந்து விபத்து: ஐவர் காயம் !


கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் (Dawson Tower) பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாதமையே இவ்விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.