அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, யக்கஸ்முல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக 26 மாடுகளை லொறியில் கொண்டு சென்ற சந்தேக நபர்கள் பொலிஸார் கைதுசெய்யச் சென்ற வேளை தப்பிச் சென்றுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அம்பலாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் யக்கஸ்முல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்ற லொறி ஒன்றை நிறுத்த முயன்ற போது லொறியானது பொலிஸ் உத்தரவையும் மீறி வேகமாக சென்றுள்ளது.
பின்னர், பொலிஸ் அதிகாரிகள் லொறியை பின்தொடர்ந்து துரத்திச் சென்ற போது லொறியில் இருந்த சந்தேக நபர்கள் லொறியை வீதியில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் லொறியை கைப்பற்றியுள்ள நிலையில் லொறியினுள் இருந்த 26 மாடுகளில் ஆறு மாடுகள் உயிரிழந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.