கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு !



கம்பஹா வீரகுள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.