வெள்ளத்தால் பாதிப்புற்ற விவசாயிகளுக்கு ஹெக்டேயருக்கு ரூ. ஒரு இலட்சம் நட்ட ஈடு !


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக, விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் விவசாயச் செய்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நட்டத்திலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில், இந்த நட்டஈடு வழங்கப்பட உள்ளது. ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க முடியும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கான சுற்றறிக்கை நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் விவசாயிகள் இதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் பிரதியமைச்சர் வலியுறுத்தினார். இதற்கமைய, விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உரிய மதிப்பீட்டுத் தொகையையும், பகுதியளவான சேதத்திற்கு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 60 வீத இழப்பீட்டுத் தொகையையும், அடிப்படை சேதத்திற்கு 40 வீத இழப்பீட்டுத் தொகையையும் பெறுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.