முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழப்பு !



உலுக்குளம் - பாவற்குளம் பகுதியில் நீபெண் ஒருவர் முதலை கடித்துப் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (21) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.