காலநிலை மாற்றங்களின் போது வாகனச் சாரதிகள் பொதுமக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை யில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறான மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன
இன்னிலையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புற கிராமங்களிலும் மற்றும் வாழச்சேனை பிரதேச பகுதிகளில் பனி மூட்டம் காட்சி அளிக்கின்றதை காணக்கூடியதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
இதனால் இப்பகுதிகளில் கடும் குளிருடன் கூடிய காலநிலை காணப் பட்டதுடன் சாரதிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை அவதானத்துடன் வாகனத்தின் முகப்பு லைட்டுகளை ஒளிரச் செய்த வண்ணம் செலுத்தி சென்றதை காணக்கூடியதாக உள்ளது
இவ்வாறான காலநிலை மாற்றங்களின் போது வாகனச் சாரதிகள் பொதுமக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.