மினிபே, ஹசலக்க, கினபலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியரின் ஒரு வயது மற்றும் எட்டு மாத பெண் குழந்தை ஒன்று லொறி ஒன்றிற்குள் சிக்கி மரணமடைந்துள்ளது.
நேற்று (28) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் குறித்த குழந்தையின் தந்தையின் மாமா (சிறிய பாட்டன்) செலுத்திய லொறியில் மோதுண்டு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
செனுஷி சிஹன்சா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் துபாயில் பணிபுரிந்து வருவதோடு, இரண்டு மாதங்களுக்கு முன்பு துபாயிலிருந்து நாடு திரும்பிய குறித்த தாய், மகளுடன் மாத்தறையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அதன் பின்னர் சில வாரங்களுக்கு முன்னர் கீனபலஸ்ஸே ஹசலக்கவில் உள்ள தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
ஹசலக்கவில் தங்கியிருந்த அவர்கள் இன்று (29 மீண்டும் மாத்தறைக்குச் செல்லத் தயாராவதற்காக, வீட்டுக்கு அவசியமான பொருட்களையும் தேவையான நீரையும் எடுத்துச் செல்ல நேற்றையதினம் (28) குழந்தையின் பாட்டன் முறையான நபர், லொறியை வீட்டிலிருந்து செலுத்தியுள்ளார்.
இதன் போது செனுஷிக்கு அவரது தாய் உணவு ஊட்டிக்கொண்டிருந்துள்ளார். ஏனையோர் சமையலறை ரொட்டியை சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
மகளுக்கு சாப்பாட்டை கொடுத்து முடித்துக் கொண்டு கை கழுவுவதற்காக தாய் சமையலறைக்குச் சென்றுள்ளார். இதன்போது ஒரு ரொட்டித் துண்டை கையில் எடுத்த சிறுமி வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அதை அறியாத லொறியை செலுத்திய வேளையில் அதன் பின்புற சில்லுக்குள் சிக்கிய செனுஷி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
லொறியில் அடிபட்ட மகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் மகளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
சிறுமி வீட்டின் முன்னால் லொறியை நோக்கி வந்தபோது, அங்குள்ளவர்கள் எவரும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், லொறியை செலுத்தி வந்த உயிரிழந்த சிறுமியின் சிறிய பாட்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.