மட்டக்களப்பில் 16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது !


மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை ஞாயிற்றுகிழமை (29) மாலை கரைக்கு வந்தது. இதன்போதே, பொதுமக்கள் முதலையைப் பிடித்தனர்.