சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியைத் தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அரிசி இறக்குமதிக்கான வரையறைகளையும் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இதற்கமைய சிறிய துறைமுகங்களிலிருந்து பல இறக்குமதியாளர்களால் கொள்வனவு செய்யப்பட்ட செய்யப்பட்ட 20, 000 மெட்ரிக் தொன் அரிசி எதிர்வரும் வியாழக்கிழமை (13) முன்னர் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.