கணவன், மனைவி கொலைச் சம்பவம் - கர்ப்பிணி பெண்ணொருவர் கைது !


காலி ஊறவத்த பிரதேசத்தில் கணவன்-மனைவி கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று அம்பலாங்கொட மாதம்பே பிரதேசத்தில் வைத்து விசாரணைகளுக்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த தம்பதி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே சந்தேகநபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தம்பதியினரின் கொலையை உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த பெண் அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.அம்பலாங்கொட மாதம்பே பகுதியை சேர்ந்த ரஞ்சன் என்ற 47 வயதுடைய நபர் மற்றும் 50 வயதுடைய மல்லிகா ஆகிய இருவருமே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.