முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பாெருத்தப்பட்டுள்ளது.
அதிலிருந்து இன்று மாலை திடீரென ஒலி எழுந்துள்ளது. அதனைகேட்ட கடற்கரையை அண்மித்த மக்கள் சுனாமி வருகின்றதோ என அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்' அது வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்வதாகவும் அதனாலேயே ஒலி எழுந்ததாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சம் தேவையில்லை எனவும், ஏதாவது அனர்த்தம் இடம்பெறும் சாத்திய கூறுகள் இருந்தால் நாம் முற்கூட்டியே அறிவுறுத்தல் வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.