வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வம் காணப்படவில்லை : ரணில் விக்கிரமசிங்க !


வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வம் காணப்படவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனால் நிச்சயமற்ற தன்மை உருவாகும் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படும் என அவர் முன்கூட்டியே எதிர்வுகூறியுள்ளார்.

வாக்காளர்கள் குறைந்தளவிலேயே வாக்களிக்க கூடிய சூழ்நிலை தென்படுகின்றது இதனால் நிச்சயமற்ற நிலைமை உருவாகலாம் அனைத்து கட்சிகளிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எல்போர்ட் ஜனாதிபதி பதவியிலிருக்கின்றார் எல்போர்ட் நாடாளுமன்றமும் உருவாககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.