குறைவடைந்த பணவீக்கம் !



2024 நவம்பர் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி, நவம்பர் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் -2.1% ஆக குறைந்துள்ளது.

இது ஒக்டோபர் 2024 இல் -0.8% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கமானது, 2024 ஒக்டோபர் 1.0 சதவீதத்திலிருந்து 2024 நவம்பர் மாதம் 0.6 சதவீதத்திற்கு சரிவடைந்துள்ள அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் 2024 ஒக்டோபர் 1.6 சதவீதத்திலிருந்து 2024 நவம்பரில் 3.3 சதவீதத்திற்குச் சரிவடைந்துள்ளது.