வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு !


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை அதிகரித்த கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய இடங்களான மட்டக்களப்பு விமான நிலையத்தில் சுற்றிவர உள்ள பகுதி நகர பஸ் தரிப்பிடம், பொதுச் சந்தை, அரசடி சந்தி மற்றும் ஜி.வி. வைத்திய சாலை சுற்றுவட்டப் பகுதி, கல்லடி, காத்தான்குடி, நொச்சிமுனை,  சித்தாண்டி, வந்தாறுமூலை, கொம்மாதுறை, மாவடிஓடை, ஈரளக்குளம் வன்னாத்திஆறு கன்னங்குடா கரையாக்கன்தீவு பண்டாரியாவெளி என பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை பொலன்னறுவை மாவட்டத்திலும் பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை இடையேயான புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.