இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்து பொலிஸார் அராஜகம்; தாய் தந்தை உறவினர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் !


சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய் தந்தை உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்;துள்ளனர்.

இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாங்கள் வீதியால் வந்துகொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று தாங்களே அடிபட்டு கீழே விழுந்தார்கள்.

நானும் எனது கணவரும் அக்காவும் வந்தனாங்கள் நாங்கள் நின்றுவிட்டோம்.

கீழே விழுந்தவர் மது அருந்தியிருந்தார் பொதுமக்கள் அவர் சாரயம் குடித்திருக்கின்றார். நீங்கள் பயப்படவேண்டாம் என தெரிவித்தார்கள்.

சிவில் உடையில் வந்தவர்கள் வந்தவர்கள் எனது கணவரிடம் வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டார்கள்.ஆனால் அவர் போக்குவரத்து பிரிவினர் வந்தால்தான் கொடுக்கவேண்டும் என்பதால் கொடுக்கவில்லை.

எனது கணவரை கையைபிடிச்சு இழுத்தார்கள் நான் விடவில்லை எனக்கு கறுப்புநிற டீசேர்ட் அணிந்த பொலிஸ்காரர் அடித்தார்.

இரண்டுமாத பிள்ளையுடன் இருந்த எனக்கு அடித்தார்கள்.நான் மயிலிட்டியில் இருக்கும் அண்ணாவை தொடர்புகொண்டேன்அண்ணா வந்தார் அவர் என்னவிடயம் என கேட்க அவருக்கும் அடித்துவிட்டு அக்காவுக்கும் அடிச்சினம் எனது இரண்டுமாத பிள்ளை வீதியில் விழுந்திட்டு எனது பிள்ளையை தூக்கி பற்றைக்குள் எரிந்தார்கள் நான் தட்டிக்கேட்க என்னை அடித்துவிழுத்திவிட்டு வெள்ளை டீசேர்ட் அணிந்தவர் எனது போனை தூக்கி எறிந்தார் பொதுமக்கள் தான் எனது போனை எடுத்துதந்தவர்கள்.

எனது கணவர் பிள்ளையை வானிற்குள் கொண்டு போக எனது பிள்ளையை கீழ போட்டுவிட்டு எனது கணவரிற்கு கையால் அடித்தார்கள். பிள்ளையை மருத்துவமனைக்கு கொண்டுபோக வெளிக்கிட நீலடீசேர்ட் அணிந்தவர் வாகனத்தை இரும்பு கம்பியுடன் மறித்துக்கொண்டு நின்றார்.

எடுத்தால் உடைப்பம் என்றார்.

அண்ணா பிள்ளைய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இரண்டுபேரையும் பொலிஸ்ஸ்டேசனிற்குள் கொண்டு சென்று அடிஅடி என அடித்து இங்கும் கொண்டுவந்து கதிரையால் அடித்தார்கள்..

எனக்கு புற்றுநோய் எனது பிள்ளை பிறந்து இரண்டு மாதம்.

எங்களிற்கு நியாயம் பெற்றுதாருங்கள் எங்கள் வாகனத்தை மீட்டுதாங்கள்.