தாழமுக்கமானது அடுத்துவரும் 12 மணித்தியாலத்தில் ஒரு சூறாவளியாக உருவாகலாம் !




தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மெதுவாக நகர்ந்து, தற்போதும் அதே பிராந்தியத்தில் காணப்படுகின்றது.

இது தற்போது ,திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 100km தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்காக 320km தூரத்திலும் புதுச்சேரியில் இருந்து தென்கிழக்காக 410km தூரத்திலும் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 490km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கையின் கரையோர பிரதேசத்தில் நகர்ந்து, அடுத்துவரும் 12 மணித்தியாலத்தில் ஒரு சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,

தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் இடையில் காரைக்கால் பிரதேசத்திற்கும் மகாவல்லிபுரம் பிரதேசத்திற்கு இடையில் எதிர்வரும் 30ஆம் திகதி காலை ஆழ்ந்த தாழமுக்கமாக அதன் வலு குறைவடைந்து ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஊடறுக்கும் சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50km/h முதல் 60km/h வரை காணப்படும்.

சில சந்தர்ப்பங்களில் இந்த காற்றின் வேகமானது 70km/h வரை அதிகரித்து வீச கூடும்.