விவேகானந்தபுரம் பாமகளில் களைகட்டிய வாணிவிழா

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தின் மட்/பட்/விவேகானந்தபுரம் பாமகளில் வித்தியாலயத்தில் வாணி விழா பாடசாலையின் அதிபர் கே.நல்லரெத்தினம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் மிகவும் பக்திபூர்வமாக கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலை வளாகத்தில் அமைந்த கலைவாணிக்கான விசேட பூசைகள் இடம்பெற்றடன்  தொடர்ந்து மாணவர்களால் இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துக் கூறுமுகமாக பாடல்கள், ஆடல்கள், நாட்டிய நாடகம் என்பன ஆசிரியர்களின் வழிகாட்டலில் நடைபெற்றன.

பெற்றோர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் போன்றோருடன் அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கலைவாணியின் அருளைப் பெற்றனர்.