தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு !



சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சில பகுதிகளில் தேங்காய் மொத்த விலை 160க்கு கிடைப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் தேங்காய் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.