சிறைச்சாலைக்குள் டேட்டா கேபிளை தனது சீருடையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற காவலர் !


பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் கைப்பேசி சார்ஜர் மற்றும் டேட்டா கேபிளை தனது சீருடையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற சிறைக்காவலர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை, பூஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி, பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் விசேட பிரிவின் சோதனை பகுதியில் வைத்து நேற்று (07) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரை சோதனையிட்ட போது அவரின் தொப்பியின் மேல் பகுதியில் துளையிட்டு அதனுள் குறித்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.