முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் சடலமாக மீட்பு !



முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

49 வயதான கட்டுகஸ்தோட்டை வெரல்லகம பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.