தேயிலை தோட்டத்தில் பாய்ந்து சொகுசு கார் விபத்து !



வீதியோரத்தில் நடப்பட்டிருந்த மரம் ஒன்றினை பிடிங்கிக்கொண்டு தேயிலை தோட்டத்தில் பாய்ந்து சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்திக்கு அருகாமையில் கொழும்பு பக்கமாக 200 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வருகை தந்த கார் ஒன்றே இவ்வாறு இன்று 29 அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எவருக்குக காயம் எதுவும் ஏற்டவில்லை என்றும் கார் மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதி வழுக்கும் நிலையில் காணப்படுவதனால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதனால் வளைவுகள் நிறைந்த மலையக பாதைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.