# # # # # # # # # # #

புதிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இரு முக்கிய தீர்மானங்கள் !


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதியை அமைச்சரவை தனது முதல் தீர்மானமாக அங்கீகரித்துள்ளது.

அந்தவகையில் தேர்தலுக்கான மொத்த செலவாக 11 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது என என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இரண்டாவது தீர்மானமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.