மட்டக்களப்பிலிருந்து நிந்தவூரை நோக்கிச் சென்றிருந்த வாகனம் கல்முனையில் வைத்து விபத்தில் சிக்கியது.
இச்சம்பவம் கல்முனை பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த பூச்சாடியுடனான தடுப்பொன்றில் மோதுண்டபோது இடம்பெற்றது.
வாகனத்தின் முன்பகுதி பெருமளவில் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.