ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு !



ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனு இன்றைய தினத்திற்கு திகதியிட்டிருந்த போதும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாத நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் ரஞ்சன் ராமநாயக்க போட்டியிடுகின்ற நிலையில் அதனை தடுப்பதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் ஜக்கிய ஜனநாயக குரல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் நிலையில் சில ஊடகங்களும் திட்டமிட்டு கட்சிக்கு எதிரான பொய்ப்பிரசாங்களை முன்னெடுத்து வருகின்றது.

எனினும் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் இன்றைய நீதிமன்றத்தின் தீர்ப்பும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.