பாதுகாப்பு அமைச்சு செயலாளருடன் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு !


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு) வை, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி பாதுகாப்புஅமைச்சில்நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் சிறந்த நிர்வாகத்துக்கான வலுவான அமெரிக்க அர்ப்பணிப்பு குறித்து எருவரும் கலந்துரையடினர்.

சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துவதற்காக அமெரிக்க-இலங்கை கூட்டுறவை வலுப்படுத்துவதுதொடர்பாகவும் இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிப்பதற்காக Beech craft King Air 360ER விமானத்தின் பரிமாற்றத்துடன் இந்த கூட்டாண்மை செயல்படுவதைக் கண்டு பெருமிதமடைவதாகவும் அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.