நவீன உலகில் தியானம்
தியானம் என்பது தியானிக்க அமர்ந்ததுமே கூடிவிடாது. வானவெளியில் வட்டமிடும் ஆயிரம் மேகங்களைப்போல் அநேக எண்ணங்கள் வந்து தியானிப்பவருக்குத் தொல்லை கொடுக்கும். வேண்டாத எண்ணங்களை விலக்கி குறிக்கோளில் இறைவனை மனதில் நிலைப்படுத்த கொஞ்சம் நாளாகும். அது தொடர்ந்த பயிற்சியில், முயற்சியில் சாத்தியப்படும். தியானம் நம்மை மேல்நிலைக்குக் கொண்டு செல்லும் இறைவளை ஒரு புறப்பொருளாக - வெளியே இருக்கிற ஒன்றாகக் கருதியும் தியானிக்கலாம் அகப்பொருளாகக் கருதிய தியாளிக்கலாம். இறைவனை மனத்தினுள்ளே இருப்பதாகக் கருதித் தியானிப்பதைத்தான் சித்தமார்க்கம் வலியுறுத்துகிறது.
பாமரர்கள் உருவமொன்றை மனத்தில் பிரதிஷ்டை செய்து கொண்டு தியானிப்பார்கள். பக்குவமுற்றவர்கள் இறைவனை அருவநிலையில் உருவமற்றது தியானிப்பார்கள். உருவத்தைத் தியானித்தல் குணங்களைத் தியானித்தல் வெட்ட வெளியைத் தியானித்தல் என்று அவரவர் திறனுக்கேற்ப தியானம் அமையும். உருவ தியானம் எளிது அருவதியானத்திற்கு - குணங்களை மட்டும் தியானிப்பதற்கு மனவலிமை முக்கியம் தியானத்தின் குறிக்கோள் இந்த உலகத்தையும் நம்மை இயக்கும் ஆதாரப்பொருளை அறிந்து அடைந்து, அனுபவிப்பதுதான் இறையானுபவத்தைப் பெறுவதே அநுபூதி அடுத்தவரிடம் விவரிக்க முடியாத ஒரு அறிவு அல்லது உணர்வு என்று இதனைக் கூறலாம்.
தியானம் அகந்தையை அழிக்கும். அறியாமையை அகற்றும் இருண்டு கிடந்த பிரதேசத்தில் ஒளியைக் கொண்டுவரும் தியானம் ஐயங்களைப்போக்கி, தெளிவைத் தரும். தியானத்தில் கிடைக்கிறது நல்லமைதி அமைதியான ஏரிநீரில் நிலவின் பிம்பத்தைக் காணமுடி கிறது நீர் காற்றினால் அலைப்புறுகிறபோது நிலவின் பிம்பம் சிதறும் தெளிவற்றதாகிவிடும். தியானம் இறைவளை அறியும் முயற்சியாய் தொடங்கி தன்னை அறிவதில் முடிகிறது. தியானத்தின் மூலம் நாம் பெறுவர் அளவற்ற அறிவு, அளவற்ற வலிமை, அளவற்ற அன்பு, அளவற்ற தூய்மை சுருங்கக்கூறின் தியானம் மனிதனை மாமனிதனாக்குகிறது.
தியானம் இரண்டு வகை ஒன்று உலகியல் சார்ந்தது. மற்றொன்று ஆன்மிகமானது. எவ்வகை தியானத்துக்கும் அவசியப்படுவது அமைதியான சூழ்நிலையும். தூயமனமும்தான் நீங்கள் தியானத்தில் வெற்றிபெற உங்களிடம் இருக்க வேண்டியவை பொறுமை நம்பிக்கை விடாமுயற்சி தியானத்தின் போது வெளியே ஓடிக் கொண்டிருந்த மனதின் கவனத்தை உள்முகமாய்த் திருப்புகிறீர்கள். தியானத்தில் மனம் மட்டுமே இயக்கம் பெறும். தியானிக்கையில் புற உலகின் தொடர்புத் தற்காலிகமாய் துண்டிக்கப்பட்டுவிடும். ஆசைகளைக் குறைத்துக் கொண்டு, நல் வழியில் வாழ்பவர்க்கே தியானம் எளிதில் கைகூடும். தீவிர ஆன்ம வேட்கையும், அசையாத நம்பிக்கையும் உங்கள் முயற்சியைச் சாத்தியமுடையதாக்கும்.அன்பே தியானத்தை அர்த்தப்படுத்தும் அன்பு மனிதர் களோடு மட்டுமல்ல. இறைவனோடும் நம்மைப் பிணைக்கிறது. தியானத்தின் மூலம் நாம் அடையக்கூடிய நன்மைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. ஏராளம். தியானம் தீங்கு செய்வதில்லை அணுவளவிலும் தியானம் நோய்களை அகற்றி, உடல் நலத்தைப் பராமரிக்கும் தியானத்தில் இரத்த அழுத்தம் குறைகிறது. மன அழுத்தம் தடுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட நேரம் உட்கார்ந்து பழகுவதால் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை கிடைக்கிறது. தியானம் வாழ்க்கையில் ஒரு சீர்த்தன்மையைக் கொடுக்கும். இவையெல்லாம் தியானத்தின் தொடக்க நிலையில் பெறுகிற பயன்கள். தியானம் முதிர்ச்சி பெற்ற நிலையில் உள்ளது தில் பேரின்பம் ஊற்றாய்ப் பெருகும். ஞான ஒளி சுடர்விடும்.
தியானத்தின் போது நேராக முதுகு இருப்பது மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால் தியானத்தில் வளர்ச்சி அடைவதற்கு ஒருவரின் முதுகுத் தண்டு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. பரிணாம வளர்ச்சியில் நாம் பார்த்தால் விலங்குகளின் பெரும்பாலானவற்றில் முதுகுத்தண்டு கிடைமட்டமாக இருக்கும். விலங்குகளிலிருந்து அடுத்த நிலையில் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதனின் முதுகுத் தண்டு மட்டுமே செங்குத்தாக இருக்கிறது. ஆன்மிக வழியில் இருப்பவர்கள் வெறும் தரையில் தியானம் செய்வதற்கு அமர மாட்டார்கள். ஏனென்றால் பூமி உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் மேலும் பல்கி பெருகி விரிவாக்கம் செய்யும் வகையில் உள்ள ஒரு சக்தி அதிர்வாக இருக்கும்.ஒன்றை பலதாக மாற்றுவது.முக்கியமாக இந்த முதுகுத்தண்டை கிடைமட்டமாக பூமியின் மீது வைத்திருந்தால் அதாவது உறங்கும் நிலையில் வைத்தால் பூமியின் சக்தி அதிர்வு முழுவதும் நம் உடம்பில் பிரதிபலித்து பூமி எந்த வழியில் செல்கிறதோ அதே போன்ற ஒத்த தன்மையை அடைவோம். கிட்டத்தட்ட 100மூ பூமியின் சக்தி அதிர்வை போன்றே நம் உடலும் செயல்படும்.
குறைந்தபட்சம் நீங்கள் முதுகுத்தண்டை நேராக வைத்து வெறும் தரையில் உட்கார்ந்தால் கூட பூமி ஏற்படுத்தும் அதிர்வில் இருந்து 90 சதவீதம் வரை முழுமையாக விலகி இருக்க முடியும். இதன் காரணமாகத்தான் ஆன்மீக நபர்கள் பெரும்பாலும், வெறும் தரையில் அமராமல், பின்வரும் வகையில் ஏதோ ஒரு வகையில் அமர்வார்கள். வெள்ளைத் துணியின் மீது அமர்ந்திருப்பார்கள், மரப் பலகையின் மீது அமர்ந்திருப்பார்கள், புலித்தோலை விரித்து அதன்மேல் அமர்வார்கள், சிலர் ஊஞ்சலின் மீது அமர்வார்கள், புலி தோல், அதுவும் குறிப்பாக இயற்கையாக இறந்த ஒரு புலியின் தோலின் மீது அமர்வார்கள். ஏனென்றால் குறிப்பாக ஒரு புலியானது தன்னுடைய இயற்கையான குணத்தினால் அது வேட்டையாடும் போது ஒரு விலங்கை குறி வைத்தால் கடைசி வரை எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாமல், ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட்டு அந்த விலங்கை வீழ்த்தும்.
புலியின் மனம் போன்ற சிந்தனை வரவேண்டும், மேலும், தியானத்தில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக முன் காலங்களில் புலி தோலை பயன்படுத்தினார்கள். தற்போதுள்ள சட்டப்படி இது தண்டனைக்குரிய குற்றம். மற்றொரு முக்கியமான காரணம் என்ன என்றால், ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கக்கூடிய குண்டலினி சக்தி விழிப்படைந்து செல்லும் பாதையாக முதுகுத்தண்டு இருப்பது. ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கக்கூடிய குண்டலினி சக்தி விழிப்படையாத நிலையில் முதுகுத் தண்டின் அடிப்பாகத்தில் ஒரு பாம்பு சுருண்டு இருப்பதுபோல இருக்கும்.
மேலும் ஆன்மிக பயிற்சிகளை செய்வதன் மூலமாக முதுகுத் தண்டின் அடி பாகத்தில் இருக்கும் குண்டலினி சக்தியானது விழிப்படைந்து, முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏறு முகமாக ஏறி தலையில் உள்ள ஸஹஸ்ராரச் சக்கரத்தை அடையும். பல ஆன்மிக குருமார்கள், தங்களுடைய சீடர்களின் குண்டலி சக்தியை விழிப்படைய செய்ய அவர்களுடைய திருக்கரத்தால் முதுகுத் தண்டை தடவி விழிப்படையச் செய்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டலினியை விழிப்படைய வைக்கும் பல வழிகளில் இது ஒரு வழி என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மனித உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களில் மூன்றரை சக்கரங்கள் அதன் சக்தி ஓட்டம் என்பது கீழ்முகமாக இருக்கும். எப்படி தண்ணீரின் ஓட்டம் என்பது மேலிருந்து கீழ் நோக்கி பாய்கிறதோ அது போன்று. முக்கியமாக உடம்பின் கீழ்ப் பகுதியில் உள்ள சக்கரங்கள் மூலாதார சக்கரம், சுவாதிஸ்டான சக்கரம், மணிப்பூரக சக்கரம், அனாகத சக்கரத்தின் ஒரு பகுதி கீழ்நோக்கி செயல்படும். மீதமுள்ள மூன்றரை சக்கரங்கள் அதன் சக்தி ஓட்டம் மேல் முகமாக இருக்கும்.
முக்கியமாக உடம்பின் மேல் பகுதியில் உள்ள சக்கரங்கள் ஹஸ்ராரச் சக்கரம், அக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம், அனாகத சக்கரத்தின் ஒரு பகுதி மேல் நோக்கி செயல்படும். தியானத்தின்போது முதுகுத்தண்டை நேராக வைக்காமல் முன்னர் கூறியதுபோல பூமி மீது கிடைமட்டமாக உறங்கும் நிலையில் வைத்தால் மேல்நிலை சக்கரங்கள் பூமி இயற்கையாக தன்னை இந்த உலகத்தில் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஏற்படுத்தும் சக்திகளை தன்னகத்தே உள்வாங்கி, கொண்டு, பூமியின் பாதையில் நம்மை செயல்பட வழி வகை செய்யும். முதுகுத்தண்டை தியானம் செய்யும்பொழுது நேராக வைக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக நாம் வலுக்கட்டாயமாக நம்மை சிரமத்திற்கு உட்படுத்த கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்திரம், சுகம், ஆசனம் என்பது யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவரின் வாக்கு. குறிப்பாக தியானம் செய்யும் பொழுது நாம் ஸ்திரமாக, அசைவில்லாமல் இருக்க வேண்டும். அப்படி நாம் இருக்கும் பொழுது அது நமக்கு சுகமானதாகவும் இருக்க வேண்டும் சிரமமாக இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு நிலை தான் தியானம் செய்வதற்கு ஏற்ற ஒரு ஆசனம் என்பது மேலே கூறிய வாசகத்தின் பொருள். முதுகுத்தண்டை ஒரு சுவரின் மீது சாய்த்து தளர்வான நிலையில் ஒரு குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம்.
இன்றைய வேகமான உலகில், மன அழுத்தமும் அதற்கான தீர்வுகளும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனவே, தியானத்திற்கு எதிர்காலத்தில் கூடுதல் தேவைகள் இருக்க வாய்ப்பு உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய இந்த உலகில், தனிமைப்படுத்தல் மற்றும் மன அழுத்தங்கள் அதிகரிக்கின்றன் இதனால் தியானத்தின் பயிற்சிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நவீன உலகில், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கும் பல்வேறு காரணிகளால் தியானத்தின் தேவை அதிகரித்து வருகிறது. சமூகம் மிகவும் வேகமாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாறுவதால், தனிநபர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அறிவிப்புகள், காலக்கெடு மற்றும் பொறுப்புகளின் தொடர்ச்சியான சரமாரி நாள்பட்ட மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது கவலை, மனச்சோர்வு மற்றும் இருதய நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தியானம் தளர்வு மற்றும் நினைவாற்றலை ஊக்குவிப்பதன் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது. வழக்கமான தியானம் உடலில் உள்ள கார்டிசோல் அளவை (மன அழுத்த ஹார்மோன்) குறைக்கலாம், இது தனிநபர்கள் தினசரி அழுத்தங்களை சிறப்பாக சமாளிக்க உதவுகிறது
மேலும் உலகளவில் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மன ஆரோக்கியத்தைச் சுற்றியுள்ள களங்கம் குறைவதால், அதிகமான மக்கள் தங்கள் மன நலனை நிர்வகிப்பதற்கான பயனுள்ள முறைகளை நாடுகின்றனர். மனநல விளைவுகளை மேம்படுத்த தியானம் ஒரு பயனுள்ள நடைமுறையாக அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனநிறைவு தியானம், மனச்சோர்வு மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கும் அதே வேளையில் உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கும். கவனச்சிதறல்கள் சமூக ஊடகங்கள், வேலை கோரிக்கைகள், தனிப்பட்ட கடமைகள் தனிநபர்கள் இந்த தருணத்தில் இருக்க உதவும் நினைவாற்றல் நடைமுறைகளின் அவசர தேவை உள்ளது. தியானம் பயிற்சியாளர்களை அவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் தீர்ப்பு இல்லாமல் கவனம் செலுத்த ஊக்குவிப்பதன் மூலம் நினைவாற்றலை வளர்க்கிறது. அன்றாடச் சவால்களுக்குச் செல்வதிலும், வாழ்க்கையைப் பற்றிய சீரான கண்ணோட்டத்தைப் பேணுவதிலும் இந்தத் திறன் முக்கியமானது.
நவீன உலகில் முரண்பாடாக உற்பத்தித்திறன் மற்றும் கவனம் குறைவதற்கு வழிவகுக்கிறது. கவனச்சிதறல்களைக் குறைப்பதன் மூலமும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் தியானம் மனதைச் சிறப்பாக ஒருமுகப்படுத்த பயிற்சியளிக்கிறது. தியானத்தின் குறுகிய அமர்வுகள் கூட கவனத்தை அதிகரிக்கலாம் மற்றும் பணி செயல்திறனை மேம்படுத்தலாம், இது பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களுக்கு விலைமதிப்பற்ற நடைமுறையாக மாறும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. பல நபர்களுக்கு, தியானம் என்பது மன அழுத்த நிவாரணம் மட்டுமல்ல, ஆன்மீக வளர்ச்சி மற்றும் சுய-கண்டுபிடிப்பு பற்றியது. பொருள் தேடுதல்களுக்கு மத்தியில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஆழமான அர்த்தத்தை தேடும்போது, தியானம் உள் எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளை ஆராய ஒரு பாதையை வழங்குகிறது. இது சுயபரிசோதனையை ஊக்குவிக்கிறது மற்றும் தனிநபர்கள் தங்கள் செயல்களை அவர்களின் மதிப்புகளுடன் சீரமைக்க உதவுகிறது.
இன்றைய மாணவர்களின் கவனம், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் கல்வி செயல்திறன் ஆகியவற்றில் தியானத்தின் நன்மைகளை அங்கீகரிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டங்களில் நினைவாற்றல் திட்டங்களை இணைக்கத் தொடங்கியுள்ளன. சிறு வயதிலிருந்தே மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான கருவிகளுடன் மாணவர்களை சித்தப்படுத்துவதை பள்ளிகள் நோக்கமாகக் கொண்டிருப்பதால் இந்த போக்கு வளர வாய்ப்புள்ளது. முடிவில், தியானத்திற்கான எதிர்கால தேவை அதிகரிப்பதன் மூலம் மன அழுத்த நிலைகள், மனநலப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு, அன்றாட வாழ்வில் கவனம் தேவை, மேம்பட்ட கவனம் மற்றும் உற்பத்தித் தேவைகள், ஆன்மீக வளர்ச்சி அபிலாஷைகள், குழு நடைமுறைகள் மூலம் சமூகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் ஒருங்கிணைத்தல் கல்வி அமைப்புகளுக்கு தியானம் அவசியம். நவீன உலகில் தியானம் தேவையான ஒன்றாக காணப்படுகின்றது என்றால் பிழையாகாது.
ரத்ணகுமார் உமா தர்ஷனி
நான்காம் வருட இரண்டாம் அரையாண்டு,
இந்து நாகரிகத் துறை,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைகழகம், இலங்கை.