புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யக்கோரி மனுதாக்கல் !


செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் தாள் I மற்றும் இரண்டாம் தாள்களை இரத்து செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி 27 மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் இணைந்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.