பௌத்த கலாசாரம், திராவிட கலாசாரம் மற்றும் இஸ்லாமிய கலாசாரத்தை பாதுகாக்கக்கூடிய கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி : நாமல் ராஜபக்ஷ !




பொலிஸ், புலனாய்வு அமைப்புகள் மற்றும் முப்படைகளையும் பலப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹட்டனில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

“.. பௌத்த கலாசாரத்தினை மையமாகக் கொண்டு பௌத்த கலாசாரம், திராவிட கலாசாரம் மற்றும் இஸ்லாமிய கலாசாரத்தை பாதுகாக்கக்கூடிய கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும்.

தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சர்வதேச பௌத்த பிரிவுகளுடன் பேசுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பை ஒடுக்கிய மூன்று ஆயுதப் படைகள், காவல்துறை மற்றும் உளவுத்துறை அமைப்பு எங்களிடம் உள்ளது, எனவே இந்த முப்படைகள், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எம்மை நம்பிய அரசியல் முகாமை பாதுகாக்க வேண்டும் இந்த நுவரெலியா மாவட்டத்தில் இருந்து புதிய அணியை முன்வைத்துள்ளோம்.

இந்த நாட்டின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதுடன் அதற்கு தேவையான ஆதரவை எமக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்..”