கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது !


மடுல்சீமை மஹதோவ புதிய பிரிவில் பெருந்தோட்டத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

49 வயதுடைய மாதோவ புதிய பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று தேடுதலை மேற்கொண்டுள்ளனர் .

இதன்போது சூட்சுமமான முறையில் வீட்டின் கூரைப்பகுதியில் (சிவிலின்கூரை) மறைத்து வைக்கப்பட்டிருந்த 48750 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் பசறை மடூல்சீமை வீதியில் மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 6 ம் கட்டைப் பகுதியில் வீட்டுக்கு பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14750 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அதே பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.