அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகளின் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் விசாரணை !



அறுகம்குடாவில் இஸ்ரேலியர்கள் உட்பட சுற்றுலாப்பயணிகள் வர்த்தக மத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கையில் சுற்றுலா விசாவில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத வர்த்தக மத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளா தெரிவித்துள்ளார்.

அனைத்து சுற்றுலாப்பயணிகளும் குறிப்பாக அருகம்குடாவில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் இலங்கையில் சுற்றுலாவிசாவிலேயே தங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மத வர்த்தக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல்களிற்கும் இது குறித்து அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.