எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (11) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர் .
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராஜா உள்ளிட்ட பத்து பேர் வேட்புமனுவில் ஒப்பமிட்டிருந்தனர்.
சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்புமனுவில்
சோமசுந்தரம் புஷ்பராஜா,கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை ,
கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்,
சிந்தாத்துரை துரை சிங்கம்,
சுப்பிரமணியம் தவமணி,
தியாகராஜா கார்த்திக் ,
ராஜகுமார் பிரகாஷ் ,
செல்லத்தம்பி புகனேஸ்வரி,
பாலசுந்தரம் பரமேஸ்வரன்
சபாபதி நேசராசா,
ஆகியோர் ஒப்பிட்டுள்ளனர்.
இன்று பகல் 11.30 மணியளவில் வேட்பாளர் பட்டியல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.