பன்றிகளை கொண்டு செல்லும்போது கால்நடை சுகாதார சான்றிதழ் அவசியம் !



பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழ் வைத்திருப்பதை கட்டாயமாக்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது.

நாட்டில் பன்றிகளிடையே 'Porcine Reproductive and Respiratory Syndrome' (PRRS) எனப்படும் வைரஸ் தொற்று நோய் பரவி வருவதனால் குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளதாவது,

பண்ணை உரிமையாளர்கள் கால்நடை சுகாதார சான்றிதழை அந்தந்த கால்நடை வைத்தியர்களிடம் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

சரியான சுகாதார சான்றிதழ் இல்லாமல் பன்றிகளை கொண்டு செல்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இது பன்றிகளை வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.