மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசியப் பாடசாலையில் 9A சித்திகளைப் பெற்ற 58 மாணவிகள் கெளரவிப்பு !


மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்த மாணவிகளைக் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு Croft மண்டபத்தில் இடம் பெற்றதுமட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 58 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான 9A பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கொண்ட பாடசாலையாக பெருமையினை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை பெற்றுள்ளது.

அத்தோடு 25- மாணவர்கள் 8A, பெற்றுள்ளதோடு, 13 மாணவர்கள் 7A-சித்திகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு விழாவில் , சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கென்னடி மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ், கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான நிதர்ஷனி மகேந்திரகுமார், மற்றும் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
இந்த மாணவர்களை பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம், பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.