இந்த வருடத்தில் 86 முறை தடம்புரண்ட புகையிரதங்கள் !


இந்த வருடத்தில் மாத்திரம் 86 புகையிரத தடம்புரள்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்தாண்டு 139 புகையிர தடம்புரள்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 2022ஆம் ஆண்டில் புகையிரதங்கள் தடம்புரண்டதன் எண்ணிக்கை 132 ஆகும்.

2021 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 115 மற்றும் 98 புகையிரத தடம்புரள்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் புகையிரத திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தொடர்ந்து இடம்பெற்று வரும் புகையிரத தாமதம் மற்றும் புகையிரத சேவைகள் இரத்துச் சம்பவங்கள் தொடர்பில் உரிய தீர்வுகளை வழங்க நிர்வாகம் தவறினால், அதற்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரின் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.